கலைச்சங்கமம் : அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்

0 250
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 31  மணப்பாறையில் முரசு கொட்டி கலைச்சங்கமத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஒருங்கிணைப்பாளர் பண்ணை சிங்காரவேலன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கலந்து கொண்டு முரசு கொட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் நையாண்டி, கரகாட்டம், காவடி இப்படி எந்த நடனங்கள் இருந்தாலும் அந்த கலைக்கு உரிய அந்தஸ்தை தந்து விருதுகள் வழங்கி கௌரவிப்பவர் தான் நம் முதல்வர் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலைஞர்களின் காவடியாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மி, கரகம் மற்றும் பறை இசைத்தும் பல்வேறு பராம்பரிய நடனங்கள் ஆடியும் அசத்தினர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோ‌வி.செழியன் ஆகியோர் இயல்இசை நாடக கலைஞர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.