இந்தியன் ரெயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி சிறப்பு பாரத தரிசன சுற்றுலா ரெயிலை இயக்க ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன்படி வருகிற 30-ந்தேதி மதுரையில் இருந்து “அரிதான இராமாயண யாத்திரை சிறப்பு” இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக செல்கிறது. முதலில் ஹம்பி, நாசிக், சித்திரக்கூடம், காசி, கயா, சீதாமார்ஹி, நேபாளம் ஜனக்புரியில் உள்ள சீதா ஜென்ம பூமி, அயோத்தியில் இராம ஜென்ம பூமி, நந்திகிராம், சிருங்க வெற்பூர், அலகாபாத் போன்ற சரித்திர புகழ் பெற்ற இடங்களில் உள்ள இராமாயண காவியத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு அழைத்து செல்கிறது.
14 நாட்கள் உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து, ரெயில் பயண கட்டணம் உள்பட தலா ஒருவருக்கு ரூ.14 ஆயிரத்து 490 ஆகும். இந்த பயணத்திற்கான டிக்கட்டுகளை திருச்சி ரெயில் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய 8287931974 என்ற தொலைபேசி எண்ணிலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய www.irctctourism.com என்ற இனையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.