வெக்காளியம்மன் கோவில் சித்திரைத் தேர்த் திருவிழா முன்னேற்பாடு : ஆட்சியர் ஆய்வு

0 451
Stalin trichy visit

திருச்சி, ஏப்.4 திருச்சி உறையூர் வெக்காளியம்மன் திருக்கோவிலில் வருகின்ற 14 ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரைத் தேர்த்திருவிழாவிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், மேற்கு வட்டாட்சியர் பிரகாஷ், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (கூ.பொ) சரவணன், மேலாளர் கௌசல்யா மற்றும் அரசு அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.