விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
பெரம்பலூர், ஏப்.8 பெரம்பலூர் மாவட்டம், , ஆலத்தூர், செட்டிகுளம் கிராமத்தில் இமயம் வேளாண் மற்றும் தொழிற் நுட்பக் கல்லூரியில் நான்காம்ஆண்டுபயிலும் மாணவிகள்கோபியாஸ்ரீ ,ஹம்சவேணி, ஹரிணி, ஹரிதா,இந்துபாலா,ஐஸ்வர்யா,ஜெய லெட்சுமி,ஜெய ஸ்ரீ, ஜெனிமா , ஜெரின் ஐடா ஆகியோர் முத்துசோளம், பருத்தி, கடலை, எள்விதைகளில் இயற்கை முறையில் விதைநேர்த்தி செய்வதை செயல்விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். விதைநேர்த்தி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர். இதில் விவசாயிகள்கலந்து கொண்டு பயன்பெற்றனர்.