இளம் பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி

0 388
Stalin trichy visit

திருச்சி,ஏப். 18  இளம் பெண்ணிடம் அதிக லாபம் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி, கொட்டப்பட்டு, காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீசத்யா. இவரது மனைவி மகேஷ்வரி (வயது36). புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரைச் சேர்ந்த மோகன் கடந்த 2022ம் ஆண்டு தான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அவரது நிறுவனத்தில் பணம் மூதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகவும் மகேஷ்வரியிடம் தெரிவித்துள்ளார். இதை நம்பிய இவர் ரூ.8 லட்சத்தை பல்வேறு பணபரிவர்த்தனைகளாக பிரித்து கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு மோகன் திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து மகேஷ்வரி அளித்த புகாரின் பேரில் பொன்மலை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

Leave A Reply

Your email address will not be published.