வன்னியர் சமுதாயத்திற்காக போராடி 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்த டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாசுக்கு நன்றி

0 354
Stalin trichy visit

காட்டுப்புத்தூரை அடுத்த உன்னீயூர் சமுதாயக் கூடத்தில் திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் மாநில துணை பொது செயலாளர் கு.லஷ்மணகுமார் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன், மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரையும் மாவட்ட நிர்வாகி முருகேசன், வரவேற்றார். கூட்டத்தில் 40 ஆண்டு காலமாக வன்னியர் சமுதாயத்திற்காக போராடி 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்த பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக நன்றியையும், பாராட்டையும் தெரிவிப்பது. அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை பெற்றுத்தர வேண்டும் எனக் கூறிய பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸுக்கு அனைத்து சமூக மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பது.

காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித்தர பா.ம.க கோரிக்கை வைத்தது. தமிழக அரசு அந்த தடுப்பணையை நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்றத்திற்கு தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் அருகே உள்ள உன்னியூரில் தடுப்பணை அமைத்துத் தந்தால் டெல்டா மாவட்டங்கள் பயனடையும். 40 ஆண்டு காலமாக வன்னியர் சமுதாயத்திற்கு போராடி 10.5ம் வன்னியர்களுக்கு உள்இட ஒதுக்கீடு பெற்றுத்தந்த பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாசுக்கு, பாராட்டுவிழாவும் மற்றும் முப்பெரும் விழா திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நடத்த ஏற்பாடு செய்யவும்.

எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் ஆணை நகராட்சிமற்றும்பேரூராட்சியில் வெற்றி பெற ஆலோசனை செய்யப்பட்டது மேலும் முசிறி பேருராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு நன்றி கூறி உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மேற்கு ஒன்றிய பாமக செயலாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.