ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உடனடியாக திருச்சி மாநகராட்சி செயல்படுத்த வலியுறுத்தல்
அகில இந்திய வேளாளர், வெள்ளாளர் மகாசேனன் சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பொருளாளர் பழனிவேல், மாநில ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நிர்வாகிகள் அண்ணாதுரை, மகளிரணி லலிதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அகில இந்திய வேளாளர், வெள்ளாளர் மகாசேனை சார்பாக அனைத்து வெள்ளாளர் அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
வேளாளர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் அமைப்பை விரிவுபடுத்த வேண்டும். சுதந்திர போராட்ட வீரரான தியாகி வ.உ.சி.யின் 150-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
திருச்சி காவேரி பாலம் பழுதடைந்து உள்ளது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உடனடியாக திருச்சி மாநகராட்சி செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.