எடமலைப்பட்டிபுதூரில் ரூ.18.41 கோடி மதிப்பில் மாதிரிப்பள்ளி : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

0 283
Stalin trichy visit

திருச்சி, மே 28 திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ரூ.18.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாதிரிப்பள்ளியை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார்.

திருச்சி மாநகராட்சி குட்பட்ட 57ஆவது வார்டு, எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் புதிதாக உயர்நிலைப்பள்ளிமாதிரி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் ராஜீவ் காந்தி நகரில் புதிய உயர் நிலைப்பள்ளி கட்டிடம் ரூ.18.41 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில், அந்த கட்டிடம் திறப்பு விழா காண தயாராகி உள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் தரைதளம், முதல் தளம் என பிரிக்கப்பட்டு, தரை தளத்தில் 16 வகுப்பறைகளும், முதல் தளத்தில் 16 வகுப்பறைகளும், நிர்வாக அறை 2 என்ற எண்ணிக்கை யிலும், ஆசிரியர்கள் அறை தரை தளத்தில் 2, முதல் தளத்தில் 2 ஆம், ஆய்வகம் தரை தளத்தில் ஒன்றும், முதல் தளத்தில் 3ம், கழிப்பறைகள் தரை தளத்தில் 2 ஆம், முதல் தளத் தில் 2ம், விழா மேடை ஒன்றும், படிகட்டுகள் தரை தளத்தில் 4 ஆம், முதல் தளத்தில் 4 ஆம், 571மீ சுற்றுச் சுவர் என மொத்தம் 2.91 ஏக்கர் பரப்பளவில் இந்த பள்ளி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளம் 34424.03 ச.அடியும், முதல் தளம் 34424.03 ச.அடியும் என மொத்தம் 12797.04 ச.அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பள்ளியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவப்பாதம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உடனிந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.