திமுக கூட்டணி வலுவாக இருப்பதை எதிர்கட்சியினர் ஒப்புக் கொண்டுள்ளனர்: திருமாவளவன் எம்.பி. பேட்டி

0 172
Stalin trichy visit

திருச்சி, மே 28 திமுக கூட்டணி வலுவாக இருப்பதை எதிர் கட்சியினர் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறினார்.

கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் திருச்சிக்கு வந்தார். திருச்சியிலிருந்து கரூர் புறப்படுவதற்கு முன்பாக தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதிலிருந்து அவர் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக இருப்பதாக ஒப்புக்கொண்டு உள்ளார். அதே போல் எதிர்க்கட்சிகள் இன்னும் ஒரு அணியாக வடிவம் பெறவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் பா.ஜ.க – அதிமுக கூட்டணி ஆளுக்கொரு திசையில் பயணிக்கும் நிலையில் உள்ளதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு வலுவாக இயங்குகிறது. அதிமுக பாஜக கூட்டணி வைத்திருந்தாலும் கூட அவர்களுக்கு இடையே ஒரு பிணைப்பு ஏற்படவில்லை. இந்த நொடி வரை தமிழ்நாட்டில் ஒரே ஒரு கூட்டணி தான் இருக்கிறது அது திமுக தலைமையிலான கூட்டணி என்பதையும் நயினார் நாகேந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார். திமுக கூட்டணி மீது பா.ஜ.கவிற்கு இருக்கும் பயத்தை திமுக கூட்டணிக்கு இருப்பதாக நயினார் நாகேந்திரன் மாற்றி பேசுகிறார். கூட்டணி அறிவித்த பின்பும் கூட பாஜக – அதிமுக இணைந்து செயல்படுவது போல் எந்த தோற்றமும் தெரியவில்லை. அமித்ஷா கூட்டணி ஆட்சி என கூறிவிட்டு சென்றார் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் அப்படி கூறவில்லை என்கிறார் அதிலிருந்தே அவர்களுக்குள் முரண் இருப்பது தெரிகிறது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பாகவே வெளியாகி உள்ளது பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ள முறைகேடுகளை அல்லது நிர்வாகத்தின் பலவீனத்தை வெளிக்கட்டுகிறது. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. வினாத்தாள்களை மாற்றி வேறு தேதியில் தேர்வு அறிவிக்க வேண்டும். நூறு சதவீதம் தேர்ச்சி பெறாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது வரவேற்கத்தக்கது தான் அனைத்து பள்ளிகளிலும் 100% தேர்ச்சி பெற வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அதை வரவேற்கவும் வேண்டும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.