திருச்சியில் காவல் ஆய்வாளர்கள் 4 பேர் பணியிட மாற்றம்

0 380
Stalin trichy visit

திருச்சி, மே 28 திருச்சியில் மாவட்டம் மற்றும் மாநகர காவல்துறைகளில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
அதன்படி திருச்சி கே.கே.நகர் காவல் ஆய்வாளர் அம்சவேணி கரூர் மாவட்டத்துக்கும், சமயபுரம் காவல் ஆய்வாளர் வீரமணி முசிறிக்கும், முசிறி காவல் ஆய்வாளர் மணிவண்ணன் துவாக்குடிக்கும் (இவர் ஏற்கெனவே பொறுப்பு ஆய்வாளராக உள்ளார்), மணப்பாறை காவல் ஆய்வாளர் ரகுராமன் சமயபுரத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் மொத்தம் 22 காவல் ஆய்வாளர்கள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு குறித்த அறிவிப்பை திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.