திருச்சி மாவட்ட காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு, யாராலும் உரிமை கோராமல் இருக்கும் 203 வாகனங்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் மீது உரிமை கோரி இதுநாள் வரை யாரும் எவ்விதமான ஆதாரங்களை சமர்பிக்காததால், அந்த 203 வாகனங்களையும் அரசுடைமையாக்கி திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி வாகனங்கள் அனைத்தையும் உரிய அலுவலர்கள் முன்னிலையில், வருகிற 30-ந் தேதி காலை 10 மணிக்கு சுப்ரமணியபுரத்திலுள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன. ஏலம் கோர விருப்பம் உள்ளவர்கள் முன்வைப்பு தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரமும் செலுத்தி வேண்டும்.
ஏலத்தொகையுடன் தனியாக சரக்கு மற்றும் சேவை வரியும் செலுத்த வேண்டும் . ஏலம் கோர விரும்புவோர் நேரில் ஆஜராகி ஏலம் எடுக்க வேண்டும். மேற்படி ஏலம் எடுக்க விரும்புவோர் வாகனங்களைப் பார்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.மூர்த்தி தெரிவித்து உள்ளார்.