மளிகை கடைக்காரரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி சிறையில் அடைப்பு

0 273
Stalin trichy visit

திருவெறும்பூர் பாரதிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்திலின் மகன் விஜயகுமார்(40). இவர் திருவெரும்பூர் ஐடிஐ அருகில் ஒரு மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வடக்கு காட்டூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கண்ணையனின் மகன் தமிழ் என்கின்ற தமிழரசன் (37) என்பவர் விஜயகுமாரின் மளிகைக்கடைக்கு வந்து பொருட்கள் வாங்கியதாகவும் வாங்கிய பொருட்களுக்கு விஜயகுமார் பணம் கேட்ட பொழுது விஜயகுமாரை, தமிழரசன் கத்தியை காட்டி மிரட்டி பணம் தரமுடியாது என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதனை அடுத்து விஜயகுமார் இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருவெறும்பூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் தமிழரசனை கைது செய்ததுடன் அவர் மேல் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொள்ளை வழிப்பறி வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.