விவசாயிகளுக்கு ஆதரவாக ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு எதிரன 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விவசாயிகள் நலன்களை கார்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கும் போக்கை கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக அணி திரள்வோம் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திருச்சி மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பொருளாளர் பிச்சைபிள்ளை, மாநகர தலைவர் சூரிய நாராயணன், ஒருங்கிணைப்பு செயலாளர் சதாசிவம், துணைத்தலைவர் விஜயகுமார் மற்றும் விஜயராணி, கோபால், பாண்டியன், சூசைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறும் வரை போராடுவோம், வெற்றி பெறுவோம் என கோஷம் எழுப்பப்பட்டது.