திருச்சி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன்(வயது 63). ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர். சம்பவத்தன்று இவர் முத்தரசநல்லூர் ரெயில் நிலைய தண்டவாளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். கோவையில் இருந்து திருச்சிக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ரெயிலில் அடிபட்டு மாதவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருச்சி ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.