வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் காட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லோகேஸ்வரன் என்பவர் வீட்டிற்குள் அறையில் பாம்பு ஒன்று புகுந்தது. அந்த பாம்பு அட்டைப்பெட்டிக்குள் புகுந்து கொண்டதை பார்த்த குடும்பத்தினர் இதுபற்றி துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அட்டைப் பெட்டிக்குள் பதுங்கி இருந்த பாம்பை பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன் பிடித்து பார்த்த போது அது சாரைப்பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து பிடிக்கப்பட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் வனத்துறையினர் பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.