திருச்சியில் திருட்டுத்தனமாக கொண்டு செல்லப்பட்ட 30 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

0 488
Stalin trichy visit

திருச்சியில் சமீபகாலமாக குட்கா போன்ற போதை பொருட்கள் அதிகம் புழக்கம் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் வாகன சோதனையை மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் முடுக்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சஞ்சீவி நகர் பகுதியில் ரோந்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக மைசூரில் இருந்து முட்டைகோஸ் ஏற்றி வந்த லோடு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அப்போது எஸ்ஐ புகழேந்தி நடத்திய சோதனையில் அந்த வாகனத்தில் கிலோ கணக்கில் குட்கா, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருள் இருந்தது தொரிய வந்தது.

இதனை தொடர்ந்து வாகனத்தை கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாகனத்தில் 30,50,000 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒரு டன்னுக்கும் அதிகமான குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் 64 மூட்டைகளில் குட்கா பொருள்களை வாகனத்தை ஓட்டி வந்த மைசூர் கர்நாடகாவைச் சேர்ந்த சோமு சேகர், மைசூர் கர்நாடகாவைச் சேர்ந்த மனோஜ் குமார் ஆகிய 2 பேரையும் கோட்டை காவல் நிலைய போலீசார் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர ஆட்டோ மற்றும் 2 பேரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது இவ்வழக்கில் தொடர்புடைய கம்பரசம்பேட்டை பாஸ்கர், அவரது அண்ணன் முத்து என்பவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா பொருள்களை 3 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுபோன்ற தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்களை விற்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை செய்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.