மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பதிவு செய்த பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று வழங்கினார்.

இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக பணிபுரிந்த கி.ஆ.பெ அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவ காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை வார்டு மேலாளர் ஆர்.ஜீவா, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வார்டு மேலாளர் சசிகலா, திருச்சி மாருதி மருத்துவமனை மருத்துவ காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதிலட்சுமி, திருச்சி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் பாக்கியா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

பின்னர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் நோய்த்தொற்று உறுப்புகள் செயலிழப்பு, பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை, நுண்துளை கருப்பை அறுவை சிகிச்சை போன்ற நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பயனாளிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சால்வை அணிந்து நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார். இந்நிகழ்வில் இணை இயக்குனர் லட்சுமி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா, மாவட்ட திட்ட அலுவலர் ரவி சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.