திருச்சி கல்லூரி மாணவர் விடுதி கட்டிடம் மற்றும் கழிவறை மோசமான நிலையில் உள்ளது – ABVP மாணவர் அமைப்பினர்!

0 349
Stalin trichy visit

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெளியூரிலிருந்து தங்கிப் படிக்க கூடிய அரசு மாணவர் விடுதிகளில் கொரோனா காலகட்டத்தில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு ABVP திருச்சி அமைப்பினர் சார்பாக விடுதிகளில் கால ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இதில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மற்றும் அம்பேத்கர் கல்லூரி மாணவர் விடுதி மற்றும் அரசு கல்லூரி மாணவர் விடுதி ஆகிய விடுதிகளில் ஆய்வு செய்து உள்ளனர். இதில் கழிவறைகள் மற்றும் கட்டிடங்கள் மோசமான நிலையில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விடுதிகளை சீரமைத்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய ABVP அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் விடுதி இயக்குனரிடம் கள ஆய்வு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.