மருங்காபுரி பகுதிகளில் மணப்பாறை எம்.எல்.ஏ ஆய்வு!
மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி தெற்கு நகர பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்துபட்டி , அய்யனார் கோவில்பட்டி, துலுக்கம்பட்டி, துவரங்குறிச்சி, அரசு பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டு மற்றும் நகர தொகுதிகள் அனைத்தையும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது இன்று பார்வையிட்டார்.

பொதுமக்களை சந்தித்து பல கோரிக்கைகளை நிறைவேற்ற மனுக்களையும் பெற்றுக்கொண்டு அதை நிறைவேற்றுவதாக வாக்குறுதிகளை அளித்தார். பின்னர் நகராட்சி ஆணையார், வட்டாட்சியர் அவர்களிடம் மக்களின் குறைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார். அருகில் நகர உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
