பஞ்சப்பூர் முனையத்திலிருந்து பேருந்து சேவை: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜூலை 16 திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து அமைச்சர் கே.என்.நேரு பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்து பேருந்து முனையம் மே 9 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டது. இதையடுத்து பேருந்து முனையத்திலிருந்து நகர மற்றும் புறநகர் பேருந்து சேவைகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பேருந்து முனையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகர காவல் ஆணையர் காமினி, மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி ஆட்சியர் (பயிற்சி) தீபிசானு, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் கோட்டத்தின் நிருவாக இயக்குநர் தசரதன், மண்டல பொதுமேலாளர்கள் சிங்காரவேலன், சதீஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலகர்கள், போக்குவரத்து அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.