ஸ்ரீரங்கத்தில் த.வெ.க.- காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்
முதல்வரானார் ஜோசப் விஜய் – ஸ்ரீரங்கத்தில் தவெக, காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகம், நீண்ட இழுபறிக்கு பின்னர் பெரும்பான்மைக்கு தேவையான 120சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்
இதனை அடுத்து, விஜய் முதல்வரானதை கொண்டாடும் விதமாக ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர், திராவிட ஆட்சியை 59 ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற விஜய் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளிப்பார் எனவும் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் உறுதிப்பட தெரிவித்தனர்