குட்செட் ரயில்வே மேம்பாலத்தில் மரம், செடிகளுக்கு தீ வைத்த மர்ம நபர் : காவல்துறையினர் விசாரணை

0 298
Stalin trichy visit

திருச்சி, ஆக.2  குட்செட் ரயில்வே மேம்பாலத்தில் மரங்கள் மற்றும் செடிகளுக்கு தீவைத்த மர்ம நபர் – ரயில்வே போலீசார் விசாரணை

திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து, டிவிஎஸ் டோல்கேட் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் பக்கவாட்டுப்பகுதியில் மரங்கள் மற்றும் செடிகள் முளைத்து காணப்படுகிறது. இந்நிலையில், இன்று நண்பகலில் மேம்பாலம் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் செடிகளில் தீப்பற்றி எரிந்ததால் வாகன ஓட்டிகள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சிறிதுநேரம் முயற்சிக்குப் பின்னர் தீயை அணைத்தனர்.

மேம்பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மர்மநபர்கள் மது அருந்துவது மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்திவருதால், மர்ம நபர்கள் யாரேனும் மது அருந்திவிட்டு இது போன்ற அசம்பாவித செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் ரயில்வே போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தீவிபத்து காரணமாக மேம்பாலம் பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்ததால் வாகனஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.