சமயபுரம் பகுதியில் 28 தனியார் விடுதிகளில் காவல்துறையினர் திடீர் சோதனை

0 294
Stalin trichy visit

திருச்சி, ஆக.2  சமயபுரம் பகுதியில் உள்ள 28 தனியார் விடுதிகளில் காவல்துறையினர் திடீர் சோதனை

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சுற்றி 28க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளது. இந்த விடுதிகளில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ரகுராமன் தலைமையிலான போலீசார் 28 விடுதிகளிலும் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

மூன்று அணியாகப் பிரிந்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது சந்தேகத்திற்கிடமாக தங்கி இருந்த இளம் பெண் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் விசாரணைக்காக சமயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.