மதுவில் விஷம் கலந்து குடித்தவர் சாவு

0 428
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த சோழமாதேவி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பிரபு(39). இவருக்கு ராசாத்தி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அதிக குடிப்பழக்கத்துக்கு அடிமையான பிரபுவால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் போதையில் பிரபு கடந்த 27ம் தேதி தான் வாங்கி வந்த மதுவில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார். மேலும் இதைக்கண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.