திருச்சி முன்னாள் மேயரும், மாமன்ற உறுப்பினருமான எஸ்.சுஜாதா மறைவு
திருச்சி, ஆக.12 திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவரும் திருச்சி மாநகராட்சி 31 ஆவது வார்டு காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினருமான திருமதி.சுஜாதா இருதய கோளாறு காரணமாக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அவரது இறுதி ஊர்வலம் நாளை (ஆக.13) காலை 9.00 மணிக்கு திருச்சி கே.ஆர்.டி அண்ணாமலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.