திருச்சியில் திறக்கப்படாமல் உள்ள சிவாஜி சிலை சிலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்!

0 536
Stalin trichy visit

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் பிறந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு பெருமை சேர்க்கும் வகையில், கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சர் நேரு முயற்சியால் பாலக்கரை பகுதியில், நடிகர் சிவாஜியின் முழு உருவ சிலை கம்பீர தோற்றத்துடன் நிற்பதுபோல் வடிவமைக்கப்பட்டது.

திறப்பு விழாவிற்கு முன்னரே அதிமுக ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் உள்ளிட்ட காரணங்களாலும் மூடப்பட்ட சிலை இன்றுவரை திறக்கப்படவில்லை.
பலமுறை இச்சிலையை திறப்பதற்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்தும் இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது.

நடிகர் திலகம் என போற்றப்படும் சிவாஜி சிலை அமைக்கப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளது வேதனை அளிப்பதாக தெரிவிக்கும் சிவாஜி ரசிகர்கள் சிலையை திறக்க தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.