புரட்டாசி மாத சனிக்கிழமை – திருச்சி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை ஒட்டி பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் குணசீலம் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் கோவிலின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை ஊட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
இந்தநிலையில் பக்தர்கள் கோவிலின் வாசலில் முன்பு சூடம் ஏற்றி, விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.