கத்தியை காட்டி பணம் பறித்தவர்களை விரைந்து பிடித்த தனிபடையினருக்கு பாராட்டு
கடந்த 26ஆம் தேதி மீனாட்சி சுந்தரம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் கொத்தனார் வேலை முடித்து தோகமலை வடசேரி அருகில் சென்ற போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 4 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து மீனாட்சிசுந்தரம் தோகமலை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டபோது அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட பிரகாஷ், ராமு, குட்டி என்கிற ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இவ் வழக்கில் விசாரணையை செய்த காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் தனிப்படையினர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார் மேலும் மேற்படி விசாரணை அதிகாரி மற்றும் தனிப்படையினரை திருச்சி காவல்துறை துணை தலைவர் பாராட்டு வெகுமதி வழங்கினார்