வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் சாவு

0 299
Stalin trichy visit

திருச்சி செப். 8 திருச்சி காந்தி மார்க்கெட் இ பி சாலையை சேர்ந்தவர் பேச்சியப்பன் (வயது40). இவர் குடிப்பழத்துக்கு அடிமையானவர். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி அருகே சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார் இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த 5ந் தேதி உயிரிழந்தார். இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று திருச்சி நடு குஜிலிதெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 41) நேற்று தன் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார் அப்போது திடீரென மயங்கி சரிந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் பிரபு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோட்டை போலீசார வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்த மூதாட்டி சாவு

கரூர் மாவட்டம் குளித்தலை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவரது மனைவி பிலோமினாள் (வயது61) இவர்கள் கடந்த மாதம் 28ந் தேதி வேலை காரணமாக திருச்சி வந்தனர். இருவரும் இரு சக்கர வாகனத்தில் கருமண்டபம் சிங்கராய நகர் அருகே சென்றனர். அப்போது ஆரோக்கியம் இருசக்கர வாகன கட்டுப்பட்டை இழந்தார், இரு சக்கர வாகனம் கீழே சரிந்தது. இதில் பிலோமினாள் தலையில் காயம் அடைந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர், தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மணப்பாறையில் . உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிலோமினாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று திடீரென தலையில் அடைந்த காயம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு பிலோமினாள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.