சாலையை சீரமைக்க: தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கடிதம்

0 221
Stalin trichy visit

திருச்சி, செப்.15 இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பழைய பால்பண்ணை ரவுண்டானாவிலிருந்து, திருவெறும்பூர் வரை உள்ள சாலையை சீரமைக்க அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். .

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ பொய்யாமொழி தனது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தேசிய நெடுஞ்சாலை, (NH-67) பழைய பால்பண்ணை ரவுண்டானா விலிருந்து, திருவெறும்பூர் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் மக்களின் சிரமங்களை போக்கிடும் வகையில் உடனடியாக சாலையை சீரமைத்திட ஆவண செய்ய வேண்டுமாய் துணை பொது மேலாளர் & திட்ட மேலாளர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.