விஜய் வருகையால் மாநகராட்சி விளம்பர பதாகைகள், பேரிகார்டுகள் சேதம் : மேயர் அன்பழகன்

0 188
Stalin trichy visit

திருச்சி, செப். 15 திருச்சிக்கு விஜய் வருகையால் மாநகராட்சி விளம்பர பதாகைகள் பேரிகார்டுகள் சேதம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பேட்டி

திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள சாஸ்திரி சாலையில் உள்ள முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் மத்திய செயலாளர் வைர மணி மற்றும் மேயர் அன்பழகன் செய்கிறார்களுக்கு பேட்டி அளித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் திமுகவின் முப்பெரும் விழா மற்றும் ஓரணியில் தமிழ்நாடு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் பற்றியும் பேசினார்கள்.

விஜய் பரப்புரை சுற்றுப்பயணத்தில் பொது சொத்துக்கள் சேதம். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சனிக்கிழமை   திருச்சி அரியலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற் கொண்டார். திருச்சியில் சனிக்கிழமை  அவரது தேர்தல் பிரச்சாரம் டி.வி.எஸ் டோல்கேட்டில் தொடங்கி, தலைமை தபால் நிலையம், பாலக்கரை ரவுண்டானா வழியாக மரக்கடையில் தனது உரையுடன் பிரச்சார பயணத்தை நிறைவு செய்தார். அவர் வந்த வழியெல்லாம் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்பின் தொடர்ந்து வந்தனர். அப்போது மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பேரி கார்டுகள், தடுப்புகள், மாநகராட்சி விளம்பர பதாகைகள், அறிவிப்பு பலகைகள் என ஏராளமான பொருட்கள் தவெக தொண்டர்களால்
சேதமானது.

இந்த நிலையில் சேதம் குறித்து பேசிய திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்.. மாநகராட்சி சார்பில் சேதம் கணக்கிடப்பட்டு,நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேருவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இழப்பீட்டுத் தொகையை தமிழக வெற்றி கழகத்திடம் இருந்து வசூல் செய்வதா? அல்லது சேதமடைந்த பொருட்களை சீரமைத்து தருமாறு கூறுவதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார். 

Leave A Reply

Your email address will not be published.