பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ, தரைக்கடைகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும் : சி.ஐ.டி.யு வலியுறுத்தல்

0 210
Stalin trichy visit

திருச்சி செப் 15 சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட 16-வது மாநாடு திருச்சி டி.எம். எஸ்.எஸ். வளாகத்தில் தோழர் கே.வெங்கடேசன் நினைவரங்கத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநகர் மாவட்ட தலைவர் டி. சீனிவாசன் தலைமை தாங்கினார். சங்கக் கொடியை எஸ்.சி.டி.சி ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சண்முகம் ஏற்றினார்.அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணை செயலாளர் செல்வி வாசித்தார்.  மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே. செல்வராஜ் வரவேற்புரையாற்றினார். .
சிஐடியு மாநில துணைத்தலைவர் சந்திரன் துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ரெங்கராஜன் வாசித்தார். வரவு – செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் மணிகண்டன் சமர்ப்பித்தார். மாநில பொதுச் செயலாளர் சுகுமாறன் சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை சுற்றி செயல்பட்டு வந்த ஆட்டோக்கள், தரைக்கடைகளுக்கு பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கி தர வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள துறையூர்,அரியலூர், கடலூர் பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மாநில செயலாளர் எம்.தனலட்சுமி நிறைவுரையாற்றினார். முன்னதாக ஊர்வலத்தை மூத்த தலைவர் எஸ். ஸ்ரீதர் துவக்கி வைத்தார் முடிவில் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.