உயிர்பலி ஏற்படும் முன் சரிசெய்ய வேண்டுகோள்
திருச்சி மாவட்டம், ராஜகோபால் நகர் இரண்டாவது குறுக்கு தெரு கொள்ளிடகரை அருகில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் மின் தேவைக்காக அப்பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து மின்சாரவாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.