திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

0 609
Stalin trichy visit

மார்பகப் புற்றுநோயானது தமிழகத்தை பொறுத்தவரையில் 2016-ல் 9200 -ஆக இருந்து தற்போது 12300 -ஆக உயர்துள்ளது.மேலும் முன்பெல்லாம் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு வரும் இந்த நோயானது தற்போது 30 – 40 வயதுகளிலேயே வந்துவிடுகிறது. எனவே இந்த மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் வருடந்தோறும் அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று‌ திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் பிங்க் நிற பலூனை காற்றில் பறக்க விட்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வனிதா தலைமை தாங்கினார்.

மேலும் மார்பக புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு புத்தகங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டீன் வனிதா,

மார்பக புற்றுநோய் குறித்த அச்சத்தை போக்கும் வகையில் இன்று பிங்க் நிற பலூன்களை காற்றில் பறக்கவிட்டோம்.மேலும் பேசிய அவர், பெண்களுக்கு அதிகமாக புற்றுநோய் வருவதை தடுக்க உடல் பருமனை குறைக்க வேண்டும்,தாய்ப்பால் கொடுப்பது அவசியம் மேலும் லிப்டில் பயணிக்காமல் படிக்கட்டில் நடக்க வேண்டும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.