“செயின்ட் ஜோசப் காலேஜ் அலுமினி வாலிபால் அகாடமி” – இந்திய அளவில் அமைக்கப்படும் முதல் அமைப்பு!

0 513
Stalin trichy visit

திருச்சி தூய வளனார் கல்லூரி முன்னாள் கைபந்து விளையாட்டு வீரர்களின் கூட்டம் தூய வளனார் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் ரெக்டர் டாக்டர் அருட்தந்தை லியாநாட் பெர்னாண்டோ, கல்லூரியின் செயலாளர் அருட்தந்தை பீட்டர், கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை ஆரோக்கியசாமி சேவியர், கல்லூரியின் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை பெர்க்மான்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச மாநில முன்னாள் கைபந்து  விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஒன்றிணைந்து கல்லூரி கைபந்து அணியின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் “சென்ட் ஜோசப் காலேஜ் அலுமினி வாலிபால் அகாடமி” என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். இதுபோல் ஒரு அமைப்பு அகில இந்திய அளவில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த அமைப்பின் மூலம் கல்லூரி கைபந்து அணியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வது என்பது முடிவு செய்யப்பட்டது. மேலும் விழாவில் கல்லூரியின் விளையாட்டு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கல்வி இயக்குனர் காளிதாசன், தூய வளனார் கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் பிரேம் எட்வின் மற்றும் ரெனில் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அகாடமி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.