ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் அருகே உள்ள கள்ளிக்குடியில் அமைந்துள்ள காய்கறி, பழங்கள் மற்றும் மலர்கள் காண மத்திய வணிக வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்களை 623 கடைகளும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு 207 கடைகளும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

அரசாணை அடிப்படையில் கடந்த 2020 செப்டம்பர் மாதம் வணிகர்களுக்கான கடைகளில் 412 கடைகள் வணிகர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே மீதமுள்ள 211 கடைகளில் தரைதளத்தில் 84 கடைகளும், முதல் தளத்தில் 127 கடைகளும், உற்பத்தியாளர் நிறுவனம் கடைகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட போக மீதமுள்ள 49 முதல் கடைகளும், தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களின் விண்ணப்பங்களை திருச்சிராப்பள்ளி விற்பனைக்குழு, 199, மதுரை ரோடு, திருச்சி – 8 என்ற முகவரியில் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ள கடை ஒதுக்கீடு குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.