பிளாஸ்டிக் ஒட்டு தசை நரம்பு அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர் சாதனை
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கொண்டயம்பள்ளி அஞ்சல் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் விஜய் பாண்டியன்(24).இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கி வலது மோதிர விரலில் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் தையல் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது விரலின் தசை நாண் நரம்பு அறுந்து போனதை சரி செய்யாமல் வெறும் மேல் தோலை மட்டும் தையலிட்டு அனுப்பியதால் விஜய்க்கு வலது மோதிரவிரல் நேராக நீட்ட முடியாமல் அடங்கிய காணப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக அடங்கிய விரலுடன் சிரமப்பட்டு வந்த விஜய் தனியார் மருத்துவமனைகளில் அவர்களை சரிசெய்ய அணுகிய போது 3 லட்சம் செலவாகும் என்று கூறவே செய்வதறியாமல் திகைத்து நின்றார். ஒருசில அரசு மருத்துவமனைகளுக்கு சென்றபோது தசை நான் நரம்பு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்யும் வசதி இங்கே இல்லை என சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும் என்று கூறவே சென்னைக்கு செல்ல முடியாமல் செய்வதறியாது இருந்து வந்துள்ளார் அந்த வாலிபர்.

இந்நிலையில் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிக்கலான எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைகள் பலன் வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் செய்யப்படுவதை செய்தித்தாள்களில் பார்த்த விஜய் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜான் விஸ்வநாத்னிடம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காண்பித்தார். டாக்டர் ஜான் விஸ்வநாத் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு MRI ஸ்கேன் செய்து பார்த்ததில் வலது மோதிர விரலின் மேல் தூக்கம் தசை நரம்பு முற்றிலும் சிதைந்து போய் இருப்பதை கண்டுபிடித்து அதை சரிசெய்ய முன் கையில் உள்ள வேறொரு தசைநார் நரம்பின் ஒரு பகுதியை எடுத்து (சுமார் 16 cm சென்டி மீட்டர்) அளவு சிதைந்து போன தசைநாண் நரம்பிற்கு பதிலாக ஒட்டுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்தார்.
அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கிய அறுவை சிகிச்சை 1:30 வரை விஜய்க்கு டாக்டர் ஜான் விஸ்வநாத் தலைமையில் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ குழுவில் இடம் சுமார் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து முன் கையில் நடுப்பகுதியில் உள்ள தசைநார் நரம்பின் ஒரு பகுதியை 16 செ.மீ. அளவு வெட்டி எடுத்து அதனை மோதிர விரலில் சிதைந்துபோன தசைநாண் நரம்பிற்கு மாற்றாக வெற்றிகரமாக பொருத்தினார்.
இந்த அறுவை சிகிச்சை குறித்து எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜான் விஸ்வநாத் கூறுகையில், வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்ட இந்த தசை நரம்பு மாற்று அறுவை சிகிச்சை டென்டான் ப்ரிஃ கிராவ்ட் மற்றும் ரி கண்டஸ்ட்ரக்ஷன் என்ற நவீன ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் சாதாரண சாதாரண துணை தாலுகா மருத்துவமனையான துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டது, மிகவும் மகிழ்ச்சியான மிகவும் சவாலான சாதனையாகும் என்றார்.
இது போன்ற நவீன சிக்கலான நுணுக்கமான அறுவை சிகிச்சைகள் MMC சென்னை அல்லது CMC வேலூரில் தான் செய்யப்பட முடியும் என்கிற வரலாறுகள் மாறி சாதாரண துணை தாலுகா அரசு மருத்துவமனையில் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதை கடந்த சில மாதங்களாக டாக்டர் ஜான் விஸ்வநாத் பல சிக்கலான எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைகள் பலவற்றை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையிலேயே செய்து நிரூபித்து வருகிறார்.
தற்போது இளைஞர் விஜய் முழு உடல்நலத்துடன் தேறி வருகிறார். ஒட்டு வைக்கப்பட்ட தசை நரம்பு முழுவதுமாக இணைய 6 லிருந்து 12 வாரங்கள் ஆகலாம் எனவும் அதன்பின் முறையான இயன்முறை பயிற்சி வழங்கப்பட்டு விரலின் அசைவுகள் முழுமையாக இயல்பான நிலைக்கு வந்துவிடும் என்று டாக்டர் ஜான் விஸ்வநாத் நம்பிக்கை தெரிவித்தார். பல அறுவை சிகிச்சை சாதனைகளை சமீப காலமாத செய்துவரும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையின் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை பிரிவினருக்கு நோயாளிகளும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இவ்வறுவை சிகிச்சையின்போது விஜயின் வலது கை மட்டும் தோள்பட்டையில் இருந்து மரத்துப்போகும் நவீன மயக்க மருந்து கீழ் கழுத்துப்பகுதியில் செலுத்தப்பட்டு (சூப்ரா கிளாவிகுலர் நெர்வ் ஃபளாக்) முழு சுயநினைவுடன் ஹெட்போனில் பாட்டு கேட்டு கொண்டிருக்கும்போது வெற்றிகரமாக செய்யப்பட்டது.
இடையில் செல்போனில் தனக்கு பிடித்த படம் பார்க்கவும் அவ்வப்போது வந்த அழைப்புகளை உறவினர் நண்பர்களுடன் பேச வசதிகள் செய்து அனுமதிக்கப்பட்டதாக நோயாளிக்கு அறுவை சிகிச்சை அரங்கிற்குள் இருந்ததாகவே உணரவில்லை என்றும் திரையரங்குக்குள் இருந்தது போல் இருந்தது என்றும் மகிழ்வுடன் கூறிய மகிழ்ச்சியான தருணம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மிகவும் சிறப்பாக உள்ளது என துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர்.