புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி – தமிழ்நாடு கமிட்டி மாநில பேரவை கூட்டம்

0 166
Stalin trichy visit

திருச்சி, நவ.10  புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி(RSP) தமிழ்நாடு கமிட்டி மாநில பேரவை கூட்டம் மற்றும் செந்தமிழ் நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா பொது தொழிலாளர் நல பாதுகாப்பு சங்கம் கூட்டம் இன்று ராணி அம்மையார் அரங்கம் அருண் ஹோட்டல் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன UTUC தமிழ்நாடு கமிட்டியில் ஏற்கனவே 11 தொழிற்சங்கங்கள் உள்ளன அத்துடன் 12 தொழிற்சங்கமாக செந்தமிழ் நாடு கட்டுமான தொழிற்சங்கத்தை இன்று இணைத்தது மேலும் UTUC தமிழ்நாடு கமிட்டி மாநில தலைவர் கோவிந்தராஜ் வழக்கறிஞர் ,RSP தமிழ்நாடு கமிட்டி மாநில பொதுச் செயலாளர் தோழர் பி,வெற்றி குமார் அகில இந்திய ஜனநாயக பத்திரிகையாளர் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் சி, கருணாகரன் UTUC தமிழ்நாடு கமிட்டி மாநில பொதுச் செயலாளர் எஸ் ஆர் செபஸ்டியான்  மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தோழர்களும் கலந்து கொண்டனர் .

ஜனவரி மாதம் கூடுவாஞ்சேரியில் மாநில மாநாடு நடத்துவது என்றும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் மேலும் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டு ராணி அம்மையாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனைத்து தோழர்களும் மரியாதை செலுத்தி அனுசரிக்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.