வாகனம் மோதி இறந்த மயில்: வனத்துறையினரிடம் ஒப்படைத்த பா.ஜ.க.பிரமுகர்
திருச்சி, நவ.10 திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் மயில்கள் உள்ளது. இந்நிலையில் இன்று திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி புதூர் அருகே மயில் ஒன்று சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த வாகனம் மோதி படுகாயம் அடைந்தது. உடனே அந்த வழியாக சென்ற பாஜக வடக்கு ஒன்றிய தலைவர் சித்தானத்தம் சுப்ரமணி அந்த மயிலை மீட்டு அதற்கு தண்ணீர் கொடுத்தார். இருப்பினும் சில நிமிடங்களில் அந்த மயில் பரிதாபமாக உயிரிழந்தது.
உடனே இதுபற்றி மணப்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சுமார் 2 மணி நேரம் கடந்தும் வனத்துறையினர் வர தாமதம் ஆனதால் அவரே அந்த மயிலை ஒரு சாக்குப் பையில் போட்டு வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று மயிலுக்கு துணி போர்த்தி மாலையிட்டு இறுதிச் சடங்கு செய்து பின்னர் வனத்துறையிடம் ஒப்படைத்து சென்றனர்.