மணப்பாறை அருகே மாயமான கொத்தனார் சடலமாக மீட்பு
திருச்சி, நவ.13 மணப்பாறை அருகே மூன்று நாட்களுக்கு முன் மாயமான கொத்தனார் பாலத்தின் அடியில் சடலமாக கிடந்த மர்மம். போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கோவில்பட்டி செல்லும் சாலையில் பெரியமணப்பட்டி பிரிவு சாலையின் அருகில் பாலத்தின் அடியில் தேங்கியிருந்த தண்ணீரில் சீகம்பட்டியை சேர்ந்த கொத்தனார் அச்சா என்கின்ற கருணாநிதி (வயது 38) மர்மமான முறையில் சடலமாக கிடந்தார். மணப்பாறை காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்க்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை.
வீட்டில் இருந்து மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொலையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.