நேர்மையான முறையில்தான் தேர்தலை சந்திப்போம்: அமைச்சர் ரகுபதி பேட்டி
திருச்சி, டிச.3 நேர்மையான முறையில்தான் தேர்தலை சந்திப்போம், வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்து தேர்தலை சந்திக்கமாட்டோம். தற்போதைய வாக்காளர் பட்டியல் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் – அமைச்சர் ரகுபதி பேட்டி
திருச்சி விமான நிலையத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், புதுச்சேரி முதல்வர் தவெக பேரணிக்கு அனுமதி மறுப்பது என்பது அவர்கள் முடிவுஎடுப்பது நான் கருத்துகூற முடியாது, தமிழகத்தில் நாங்கள் அனுமதி மறுக்கவில்லை நீதிமன்றத்தில் என்ன வழிமுறைகள் கூறப்பட்டுள்ளதோ அதனைப் பின்பற்றி ரோடுஷோ நடத்தலாம்.
களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள்.. அதாவது களத்தில் மற்றும் அரசியலில் எதிரிகள், மற்ற வகைகளில் எல்லாரும் நண்பர்களாககூட இருக்கலாம். எங்களோடு இருப்பவர்கள் தோழர்கள் மற்றும் நண்பர்கள், திமுக எங்கள் எதிரி இல்லை என்று ஆதவ் அர்ஜுனா கூறுவதற்கு நான் பதில் சொல்லமுடியாது.
கொளத்தூர் தொகுதியில் இறந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக நயினார் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு… வாக்காளர் பட்டியல் வரப்போகிறது நிரூபிக்கட்டும், இறந்தவர்கள் பெயரை சேர்த்துவிட்டு ஓட்டுபோட முடியாது, அவர்களுடைய பிஎல்ஏ – 2 இருக்கிறார்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கட்டும், பார்த்து சொல்லட்டும் அதற்காகத்தான் காலஅவகாசம் இருக்கிறதே, எங்களைப் பொருத்தவரையில் நேர்மையான முறையில்தான் தேர்தலை சந்திப்போம், வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்து தேர்தலை சந்திக்கமாட்டோம். இப்போது இருக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய நிச்சயமான வெற்றியை 2026 தேர்தலில் தேடித்தரும்.
உதயநிதி ஸ்டாலின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னிலைப்படுத்துவது குறித்த கேள்விக்கு… அவர் துணை முதலமைச்சர்… முதலமைச்சர் செல்ல முடியாத இடத்திற்கு துணை முதல்வர் செல்வது என்பது இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களிலும் இருக்கக்கூடிய ஒரு வழக்கம்தான், துணைமுதல்வர் என்ற முறையில் அவர் நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார்.
செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றது திமுகவிற்கு சாதகமா பாதகமா என்ற கேள்விக்கு.. செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல் தான் என்று கூறி இருக்கிறேன், அதிலிருந்து நீங்கள் எல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்றார்.