தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்ற திருச்சி மாணவிக்கு அமைச்சர் வாழ்த்து

0 139
Stalin trichy visit

திருச்சி, டிச.3  தேசிய கராத்தே போட்டி தங்கம் வென்று திருச்சி பள்ளி மாணவி சாதனை அமைச்சர் வாழ்த்து – திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

டிசம்பர் 1ம் தேதி டெல்லியில் உள்ள TALKOTARA உள் விளையாட்டரங்கில் , இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 2000திற்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இப்போட்டியில் தமிழ்நாட்டை சார்ந்த திருச்சி வீராங்கனை லக்ஷனா 11 வயது மற்றும் 45கிலோ எடைபிரிவில்(குமித்தே) இந்திய அளவில் தமிழக அணி சார்பில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்தார்.

இவர் பிரகாஷ் நகரில் உள்ள தமிழ் வாரியர் கராத்தே அகாடமியில் பயிற்சியாளர் சுதாகர் என்பவரிடம் சிறு வயது முதலே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

திருச்சி விமான நிலையத்தில் வந்த வீராங்கனை லக்ஷனாவை தமிழக அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வீராங்கனை பயிற்சியாளர் குடும்பத்தினர் பொன்னாடை போற்றி இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளுக்கு பேட்டி அளித்த வீராங்கனை லக்ஷனா . கடந்த ஏழு வருடங்களாக கராத்தே பயிற்சி பெற்று வருகிறேன். டெல்லியில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் என்று உள்ளேன் இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து சுமார் 2000 வீராங்கனைகள் பங்கேற்றனர். என்னுடைய பிரிவில் சுமார் 360 வீரர்கள் பங்கேற்ற நாள் அதில் நான் தங்கம் வென்று உள்ளேன்.

அடுத்ததாக தேசிய அளவிலான போட்டிகளை பங்கேற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெயர் வாங்கி கொடுக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
தினம் காலையில் சிறிது நேரமும் மாலை முழு நேரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
தமிழக அரசு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.