காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட எஸ்.பி. ஆய்வு

0 144
Stalin trichy visit

திருச்சி, டிச.7 திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.

தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூரில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு நேற்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் நேரில் வருகை தந்து ஆய்வு செய்தார். அப்போது காவலர்களின் உடைமைகள், காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் குறித்த கண்காணிப்பு பணிகள், காவல் நிலையத்தில் உள்ள துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முடிக்கப்பட்ட, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விபரங்களையும் எஸ்.பி செல்வநாகரத்தினம் கேட்டறிந்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

முன்னதாக காவல் நிலையத்திற்கு வந்த திருச்சி எஸ்.பி க்கு ஆயுதம் தாங்கிய சல்யூட் மரியாதை முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னகொடி, உதவி ஆய்வாளர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. ஆய்வு பணிகள் முடித்த திருச்சி எஸ்பி காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய காவல் நிலைய கட்டிடம் கட்டித் தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். திருச்சி எஸ்.பி ஆய்வு பணியினால் காட்டுப்புத்தூர் காவல் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.