இருங்களூரில் உழவரைத் தேடி வேளாண்மை கூட்டம்

0 270
Stalin trichy visit

திருச்சி, டிச.12  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இருங்களுர் கிராமத்தில்
இன்று உழவரை தேடி வேளாண்மை கூட்டம் நடைபெற்றது.

இதில் மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி தலைமை ஏற்று நடப்பு ஆண்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் மானியங்கள் குறித்தும் விளக்க உரையாற்றினார். உதவி தோட்டக்கலை அலுவலர் பிரசன்னா மற்றும் மண்ணச்சநல்லூர் ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளர் திவ்ய பாரதி ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனர்.

இதில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரியை சார்ந்த பேராசிரியர் மாரிமுத்து கலந்து கொண்டு உரை ஆற்றினார், மேலும் வேளாண்மை பட்ட படிப்பு இறுதி ஆண்டு மாணவிகள் சாறு உறிஞ்சும் பூச்சிகள் பற்றியும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் எடுத்துரைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக நாளாந்தா வேளாண்மை கல்லூரியை சார்ந்த வேளாண்மை பட்ட படிப்பு இறுதி ஆண்டு மாணவர்கள் இனக்கவர்ச்சி பொறி அமைப்பது குறித்தும் அதன் அமைப்பதன் அவசியம் குறித்தும் மற்றும் எள் பயிரில் போரான் சத்து பற்றாக்குறை சரி செய்வது குறித்தும் செயல் விளக்கங்கள் செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் உதவி வேளாண்மை அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.