திருட்டு வழக்கு குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்

0 196
Stalin trichy visit

திருச்சி, டிச.12 திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறையினர்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த பிரபல கொள்ளையன் ராஜசேகரை, திருச்சியில் சுட்டுபிடித்த கோவை தனிப்படை போலீஸார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த பிரபல கொள்ளையன் ராஜசேகர் இவர் மீது கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கோவை மாநகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் ராஜசேகர் தேடப்பட்டு வந்தார். திண்டுக்கல் வடக்கு நகர காவல் நிலைய சந்தேக சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜசேகர் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீனிவாசன் நகரில் பதுங்கி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற கோவை மாநகர தனிப்படை போலீசார் உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் நான்கு போலீசார் பிடிக்க முயன்ற போது உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் முதுநிலைக் காவலர் கண்ணன் ஆகியோரை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய போது உதவி ஆய்வாளர் பாஸ்கர் ராஜசேகரை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

இதில் காயம் அடைந்த ராஜசேகருக்கு இடது விழாவிலும் இடது தொடையிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெட்டு காயம் அடைந்த காவலர்கள் பாஸ்கர் மற்றும் கண்ணன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகர் பகுதியில் வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்துள்ளார். தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் மூலம் இந்தப் பகுதியை அடைந்ததும்.. போலீசார் வந்ததை நோட்டமிட்டு சுவர் ஏறி குதித்து பக்கத்து தெருவில் ஓடிய போது போலீசார் அவரை சுட்டு பிடித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.