கூரை வீடு தீப்பற்றி எரிந்து சேதம் : முசிறி எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்

0 162
Stalin trichy visit

திருச்சி, டிச.30  திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சீலை பிள்ளையார்புத்தூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து (70). விவசாய கூலித் தொழிலாளியான இவர், அங்குள்ள ஓலை வேய்ந்த கூரை வீட்டில் வசித்து வந்தார்.
​இந்த நிலையில், நேற்று இரவு எதிர்பாராத விதமாக பிச்சைமுத்துவின் வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் சூழ்ந்தது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பாத்திரங்கள், துணிமணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்தன
தகவலறிந்த முசிறி தொகுதி எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் நேற்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட பிச்சைமுத்து மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான நிதி உதவி, வேட்டி சேலை வழங்கினார்.
​அப்போது அவர் பேசுகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் புதிய வீடு கட்டித் தருவதற்கு உரிய பரிந்துரை செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.
​இந்த நிகழ்வின் போது காட்டுபுத்தூர் நகர செயலாளர் சுப்பிரமணியன். மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.