திருச்சி, ஜன.1 துறையூர் அருகே அரசு பேருந்து மோதி காரில் சென்ற இருவர் பலி!
துர்க்கை அம்மன் விநாயகர் சிலை வாங்க சென்ற போது விபரீதம்!
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர்கள் திருஞானம்
சீனிவாசன் சண்முகம் மருதமலை இவர்கள் அப்பகுதியில் உள்ள கோவிலில் துர்க்கை அம்மன் மற்றும் விநாயகர் சிலை அமைப்பதற்காக துறையூர் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்திற்கு காரில் சென்றுள்ளனர். காரை அதே ஊரைச் சேர்ந்த சிவசங்கர் ஓட்டி வந்தார்.
துறையூர் அடுத்த கிழக்கு வாடி அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த மினி ஆட்டோ மீது பெரம்பலூரில் இருந்து வந்த மினி லாரி பின்னால் மோதியது இதனால் லாரி சாலை நடுவே ஒதுங்கியதால் சென்னையில் இருந்து துறையூர் நோக்கி வந்த அரசு பேருந்து சாலையின் வலது புறம் ஏறவே எதிரே வந்த கார் நேருக்கு நேரு நேர் மோதியது
இதில் காரை ஓட்டி வந்த சிவசங்கர் திருஞானம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்ற மூவரும் காயமின்றி உய்த்தப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.புத்தாண்டு அன்று சாமி சிலைகள் வாங்க வந்த இருவர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.