பொங்கல் பரிசுத் தொகுப்பு : அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்
திருச்சி, ஜன.8 பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரரர்களுக்கு ஒரு பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, வேட்டி, சேலை மற்றும் ரொக்கமாக ரூ.3000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஆலத்தூர், பட்ரோடு நியாயவிலைக்கடைகளில் இன்று தொடங்கி வைத்தத்தை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட முதலியார் சத்திரம், காஜாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, மண்டலத் தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.