திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த கஞ்சா பறிமுதல்

0 116
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 11 காசி ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) ஆய்வாளர் அஜய்குமார் தலைமையிலான காவல்துறையினர் நேற்று திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 6ஆவது நடைமேடைக்கு வந்த வாரணாசி – ராமேசுவரம் விரைவு ரயிலில் (22536) சோதனை நடத்தினர். அப்போது, கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பயணப் பையை சோதனையிட்டபோது, அதில் சுமார் 1 லட்சம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண் டறியப்பட்டது. கஞ்சாவைப் பறி முதல் செய்த காவல்துறையினர், திருச்சி போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருச்சி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.