10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கம் : மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு

0 83
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 11 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கம் : மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியர்கள் தேர்வு மையங்களுக்கு நேரத்திற்கு மற்றும் பாதுகாப்பாக சென்று சேரும் வகையில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்து அழைத்து வந்த மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது தேர்வு நடைபெறும் நிலையில், பல பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு மையங்களுக்கு வருவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் மாணவர்கள் நேரத்திற்கு தேர்வு மையங்களுக்கு வந்து தேர்வை எழுதியுள்ளனர்.

மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு சிறப்பான ஏற்பாடுகளை செய்த மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு    மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.